Wednesday, February 20, 2013

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்


எமது பிராந்திய வல்லரசாகவும்,2020 இற்குள் உலக வல்லரசாகவும்  உருவெடுக்க இருக்கும் இந்திய திருநாட்டின் விவசாய,வேளாண்மை துறை பற்றி இச்சிறியவன் கொண்ட  அறிவை வைத்து ஆராய்கிறேன்...

தற்போதைய இந்திய விவசாய நிலப்பரப்பை அளர்ந்து பார்த்தால் 9.5 ஹெக்டர் ஆக உள்ளது.100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டுக்கு இவ் விளைச்சல் நிலங்கள் போதுமான போதும் ,வறட்சி,மானியங்களில் ஊழல்,வெள்ளம் போன்றவை காரணமாக ஒப்பீட்டளவில் விளைச்சல் குறைவாகவே பெறபடுகிறது.நாட்டின் உணவுப்பொருள் தேவை 2050 இல் 45 கோடி டன் ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனை பூர்த்தி செய்ய 16 கோடி ஹெக்டர் விவசாய நிலத்தில் உச்சபட்ச விளைச்சலை பெற்று கொள்ள வேண்டிய நிலையில் இந்திய வருங்கால சந்ததி உள்ளது.

இச்சவால்களக்கு மத்தியில்  இந்திய மத்திய அரசாங்கம் ஏழை விவசாயிகளை கட்டி வைத்து அடிக்காத குறையாக அல்லது சோற்றில் விஷம் வைக்காத குறையாக புதிய திட்டம் ஒன்றை நடைமுறை படுத்தி வருகிறது.




கெய்ன்ஸ் இந்திய நிறுவனம் சார்பில் கேரள மாநிலத்தில் இருந்து மசகு எண்ணையை தமிழக மாவட்டங்களான கோவை,தர்மபுரி இன்னும் சில சிற்றூர்கள் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு  
குழாய் வழியாக அனுப்ப உள்ளது.நகர பகுதிகளில் இது சாத்தியம் இன்மையால் பின்தங்கிய கிராம பகுதிகள் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய பகுதியான குழாய் விதைப்பு மூன்று மாநிலங்களில் 832 கிலோ மீட்டர்களை உள்ளடக்கியுள்ளது.குழாய் நீளத்தின் பெரும்பகுதி தமிழகத்தை ஊடுறுத்து செல்கிறது.கேரளவில் மிக சிறிய அளவிலேயே இதன் விதைப்பு உள்ளது.

இவ்வாறான திட்டம்  ஒன்றை அரசு கொண்டு வரும் போது நேரடி பாதிப்புக்களுடன் மக்களை சந்தோஷ படுத்த மேலும் சில இலவச பிரச்சனைகளையும் கூடவே தருவது வாடிக்கை.அதை போலவே இதன்  நியாய பிராமணங்கள்  மேலும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றன.

1.குழாய் விதைக்க படும் நிலம் அரசுக்கு கையகபடுத்த படும்.

2.குழாய் விதைக்க படும் நிலத்தி சந்தை மதிப்பில் 10% மட்டுமே இழப்பீடாக வழங்க படும்.

3.குழாய் செல்லும் பாதையின் இரு பகுதியிலும் 10m கையகபடுத்த படும்.

4.குழாய்க்கு மேல் பகுதியிலோ ,10m பகுதியிலோ விவசாயம் செய்ய முடியாது.

5.குழாய்க்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு குழாய் சேதம் ஏற்பட்ட பகுதி நில உரிமையாளர்  (அதன் புடுங்கி கிட்டாச்சே...அப்புறம் என்ன உரிமையாளர்?? ) தான் பொறுப்பு.சேதத்தை சரி செய்து தரா விடின் சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை நீள்கிறது.




இது தொடர்பில் பாதிக்க பட்டோர் கூறுகையில்,விவசாயம் பொய்த்து கோழி பண்ணை வைத்து மாதம் 10000 வரை சம்பாதித்து கொண்டிருந்த விவசாயி தற்போது தனது பண்ணை நிலத்தை இழந்துள்ளார்..வேறு தொழில் தெரியாத நிலையில் வெறுமையான எதிர் காலத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றார்..


முன்பு குறிப்பிட்டது போல 2050 இல் 45 கோடி டன்களாக இருக்க போகும் உணவு தேவையை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அரசு ,அதே 2050 இல் தீர்ந்து விட போகும் பெற்றோலியத்தை இப்போது பாதுகாப்பாக கொண்டு செல்ல முனைகிறது..

இது ஒரு குறுங்கால திட்டம் என்ற வகையில் அல்லாமல் நிலத்தை கூறு போட்டு இராட்சத குழாய்களை புதைத்து  ஒரேடியாக மண்வளத்தை நிர்மூலம் ஆக்கும் செயலே ஆகும்.ஒரு வேலை இத்திட்டம் கை விட படினும் குழாய்களை அகற்றிய பின்னர் முன்பிருந்த பசைமண்,காற்றிடைவெளிகள்  போன்ற வளங்கள் மீண்டும்  கிடைக்குமா என்பது சந்தேகமே .



இப்பதிவில் இலங்கையில் உள்ள நான் ஏன் இந்திய பிரச்சனை பற்றி பேசுகிறேன் என நீங்கள் ஐயம் கொள்ளலாம்...ஒரு மிகச்சிறிய (65,610 sq .km ) பரப்பை கொண்ட இலங்கை நாட்டில் விவசாய தன்னிறைவு என்பது ஏறத்தாழ 50-60 வருடங்கள் முன்பு எப்போதோ ஒரு முறை நடந்த ஒன்று.தற்போது அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப விளைநிலங்கள் காணபடாமை,காலநிலை மாற்றம் என்பவை காரணமாக உணவு பொருள் இறக்குமதியில் தங்கி இருக்கும் நாடாக இலங்கை இருந்து வருகிறது..இதன் விளைவு சென்மதி நிலுவை பற்றாக்குறை,நடைமுறை கணக்கு பாதக  மீதியை வெளி நாட்டு பண ஒதுக்குகள் மூலம் சமாளிக்கும் நிலை என்பனவற்றை அனுபவித்து வருகிறோம்.ஒவ்வொரு முறை பாதீடு வெளி வரும் போதும் இம்முறை எந்த வரி கூட போகிறது என பதை பதித்து கொண்டே காலம் செல்லுகிறது..இவை அனைத்தும் உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சியின் காரணமாகவே உருவாகி உள்ளது என்பது பலரின் கருத்து..ஆயினும் இருக்கும் விவசாயத்தையாவது காப்பாற்ற இலங்கை அரசு விவசாயிகளக்கு பல்வேறு மானிய திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது..உர  வியாபாரம் தொடர்பான பணியில் இருப்பதால் இதன் உண்மைத்தன்மை தொடர்பில் எனக்கு சந்தேகம் இல்லை..

இவ்வளவு இருந்தும் பெரும்பகுதி உணவு பொருட்களக்கு இந்திய,சீனா,பாகிஸ்தான்,அரேபியா போன்ற நாடுகளையே நம்ப வேண்டி உள்ளது     


இந்திய நாடு பாரத தாயின் ஆசியில் பெரும்பகுதி விவசாய நிலங்களை  கொண்ட பெரு நிலமாக விளங்கி வருகிறது.வளங்களை அழிக்காமல் பாது காப்பதுடன்,விவசாய பெருமக்களின் வாழ்வை சிறப்பானதாக மாற்ற வழி  வகைகளை  செய்ய இந்திய மத்திய அரசாங்கத்தை வேண்டுகிறோம். 

   




Sunday, December 23, 2012

AMAZING PHOTOGRAPHY


வணக்கம் பதிவுலக நண்பர்களே .....

எனது அலுவலக நண்பரான அமிர்தலிங்கம் PHOTOGRAPHY இல் ஆர்வம் அதிகம் உடையவர்....அவரது புகைப்படங்கள் அனைத்தும் மனதில் பசுமையை தோற்றுவிப்பதாகவும் ,ஏதோ ஒரு மாயவித்தை போலவும் எனக்கு தோன்றியது...அவர் அனுமதியுடன்  புகை படங்களை பதிவாக இட்டுள்ளேன் ...கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன